ஸ்பாஞ் கேக்


ஸ்பான்ஞ் கேக்


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

சர;க்கரை500 கிராம்

வெண்ணெய்500 கிராம்

முட்டை8

மைதா மாவு500 கிராம்

பேக்கிங் சோடா பவுடர;5 டீஸ்பு+ன்

ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்4 ஸ்பு+ன்

செய்முறை :


🍮 ஸ்பாஞ்ச் கேக் செய்வதற்கு முதலில் சர;க்கரையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


🍮 பிறகு மைதா மாவையும், பேக்கிங் சோடா பவுடரையும் ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைத்துக் கொள்ளவும். பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து, அவற்றை எலக்ட்ரானிக் பீட்டரால் நன்கு அடித்து கலக்கவும். அடிக்க அடிக்க முட்டை வெள்ளைக்கரு திரண்டு தயிர; பதத்தில் வந்ததும் அடிப்பதை நிறுத்தவும். அதேபோல் மஞ்சள் கருவையும் பீட்டரால் நன்கு அடிக்கவும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து, அதில் வெண்ணெய் மற்றும் அரைத்து வைத்துள்ள சர;க்கரையை மட்டும் போட்டு நன்கு நுரை வர அடித்து கலக்கவும்.


🍮 அதனுடன் தயிர; பதத்திற்கு அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளைக் கருவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஒரு அகலமான தட்டைக்கரண்டியால் மிருதுவாக கலக்கவும். பின் அடித்த மஞ்சள் முட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர;த்து கலக்கவும். அதன் பிறகு மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர;த்து மெதுவாகக் கலக்கவும். பிறகு அதனுடன் எஸென்ஸ் சேர;த்து கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி பரப்பவும். பின்னர; அவனில் வைத்து 160 டிகிரி செல்சியஸில் சுமார; 35 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.


🍮 பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஆற வைத்து விரும்பிய வடிவத்தில் கேக்கை கட் செய்துப் பரிமாறவும். சுவையான ஸ்பாஞ்ச் கேக் தயார;.