ஜவ்வரிசி ஃபிர்ணி


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

ஜவ்வரிசி150 கிராம்

ரவை150 கிராம்

சர்க்கரைகால் கிலோ

பால்2 கப்

ஏலக்காய்4

முந்திhp7

திராட்சை7

நெய்2 டேபிள் ஸ்பு+ன்

செய்முறை :


  ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.


  பின்னர் அதே வாணலியில் நெய் விட்டு முந்திhp பருப்பு, திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். பாலை ஏலக்காய் தட்டி போட்டு காய்ச்சவும்.


  காய்ச்சிய பாலில் வேக வைத்த ஜவ்வரிசி, வறுத்த ரவை சேர்க்கவும். சேர்ந்து கொதி வந்ததும், சர்க்கரையை சேர்க்கவும்.


  கெட்டியாக இருந்தால் விருப்பத்திற்கு காய்ச்சிய பாலோ அல்லது கொதி நீரோ சேர்த்து கொள்ளலாம்.


  பின்னர் வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை போட்டு, கிளறி இறக்கவும். இப்போது சுவையான ஜவ்வரிசி ஃபிர்ணி ரெடி.