முட்டை நு}டுல்ஸ்
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
நு}டுல்ஸ் 1 கப்
முட்டை 2
வெங்காயம் 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
கடுகுஅரை டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நு}டுல்ஸைப் போட்டு வேக வைத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
மீண்டும் அதே வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து முட்டையை நன்கு கிளறி விடவும்.
பிறகு ஆற வைத்திருக்கும் நு}டுல்ஸையும், மிளகாய் தூளையும் சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழையை தூவி இறக்கவும். இப்போது முட்டை நு}டுல்ஸ் ரெடி.